Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி றீகன் அல்லது பரிதி என அழைக்கப்படும் நடராஜா மதீந்திரன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரும் அடைந்தோம். அவருக்கு பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் தனது வீர வணக்கத்தினை செலுத்திக் கொள்கின்றது.

1983 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்த இவர், சிறிது காலம் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

கடந்த பல வருடங்களாக பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருந்து பல தேசிய செயற்பாடுகளை முன்னின்று நடாத்தி வந்த இவர், தற்போது படுகொலை செய்யப்பட்டிருப்பதானது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை மேலோங்கச் செய்துள்ளது.

சிங்களப் பேரினவாதம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலைகளை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பலத்தைக் கண்டு அஞ்சிய சிறீலங்கா அரசு தனது புலனாய்வுப் பிரிவின் ஊடாக வெளிநாடுகளிலும் தமிழினப் படுகொலையை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளதாகவே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தேசப் பணியில் அயராது உழைத்து வந்த றீகன் அல்லது பரிதி என அழைக்கப்படும் நடராஜா மதீந்திரன் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தினை செலுத்திக் கொள்ளூம் அதேவேளை, இவரது பிரிவால் துயருறும் இவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஒரு மனிதன் தேசப்பணிக்காக தனது வாழ் நாளை அர்ப்பணிப்போடு செலவிட முன்வருகிறானோ அவன் அன்றே தனது தேசத்திற்காகவும், தன் மக்களுக்காகவும் உயிரையும் விடத் துணிந்துவிடுகிறான்.

ஆகவே பரிதி அவர்களின் சாவின் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒடுக்கிவிட முடியாது. மாறாக அது இன்னும் வீச்சுப் பெற்று எமது தமிழீழ விடுதலைக்கான பாதையினை செப்பனிடும் என்பதே உண்மை.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்.

0 Responses to படுகொலை செய்யப்பட்ட பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com