Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜீரணிக்க முடியாத பல இழப்புகளை எமது இனம் சந்தித்து மனச்சோர்வுகளில் இருந்து மீளும் முன் பரிதி அண்ணாவின் இழப்பு எம்மை வலுவாக பாதித்துள்ளது.

சொந்த இலாபங்களுக்காக மட்டும் விலைபோன சில தமிழ் கைக்கூலிகளின் மத்தியில் இன்னும் இலக்கு தவறாமல், உறுதி தளராமல் தன்முன் நின்ற அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்த உண்மையான வீரன். இன்று சாவை வென்றுவிட்டான் அவரின் இழப்பால் எமது கண்கள் கலங்கினாலும் அவரது வீரமரணம் எம் இதயத்தில் வீரத்தை விதைத்து நிற்கிறது . எமது மக்களின் நிரந்தரமான இருப்புக்காக தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.

தமிழினத்தின் விடுதலைக்காக உறுதி தளராமல் உழைத்தவர்களை துப்பாக்கி குண்டுகளால் கொன்றழித்ததை எமது இனம் ஏற்கனவே பார்த்து விட்டது. ஆனால் இச் சம்பவம் வெறுமனே கொலை என்ற நோக்கை தாண்டி எமது இனத்தின் குரல்வளையை நசுக்கி சர்வதேச சமூகத்திற்கு முன் எம்மை பலவீனபடுத்தி நாசகார இலங்கை அரசின் இனபடுகொலைகள் போர்க்குற்றங்களுக்கு  எதிரான சர்வதேசத்தின் அழுத்தங்களை திசை திருப்பும் தந்திர பொறியாகவே நாம் இதை பார்க்கிறோம்.

அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எமது காவல் தெய்வங்களான மாவீரர்களின் அனுக்கிரகம் எப்பொழுதும் கூடவே  இருக்க வேண்டுகின்றோம்.

"எமது இருள் நிறைந்த விடுதலை பாதையில் பரிதி பல திரி கொண்ட விளக்காக முன் செல்வான்"
நியூசிலாந்து மக்கள் சார்பில் தமிழ் இளையோர் அமைப்பு  - நியூசிலாந்து

0 Responses to "எமது இருள் நிறைந்த விடுதலை பாதையில் பரிதி பல திரி கொண்ட விளக்காக முன் செல்வான்" தமிழ் இளையோர் அமைப்பு - நியூசிலாந்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com