Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து களத்திலும் புலத்திலும் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு  செயல் வடிவம் கொடுத்து விடுதலைப் பணியை முன்னெடுத்த மாவீரன் கேணல் பருதி அவர்கள் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் எதிரிகளால் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார் என்ற செய்தியைகேள்விப்பட்டு நாம் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்.

தமிழ் மக்களின் இலட்சியங்களையும் மாவீரர்களின் கனவுகளையும் சிதைத்தழித்து விடுதலைப் போராட்டத்தையும் அதன் முன்னெடுப்புக்களையும்  தகர்த்தெறிந்து  தமிழினத்தையே முற்றுமுழுதாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிறிலங்கா அரசினதும் அதன் அடிவருடிகளினதும் கோரப் பற்களின் கொலைப்பசிக்கு மாவீரன் கேணல் பருதி அவர்கள் இரையாகிப்போனது இழப்புக்களை தொடர்ந்து   சந்தித்த தமிழினத்துக்கு இன்றைய காலகட்டத்தின் இழப்பு பேரிழப்பாகும்

முற்றுமுழுதாக தன்னையே அர்ப்பணித்து விடுதலைப்பணிசெய்த மாவீரன் பருதி அவர்கள் முள்ளி வாய்க்கால் இழப்பின் பின்னரும் சோர்ந்து விடாமல் புலத்தில் சிறைசென்று மீண்ட பின்னரும் இலட்சியங்களில் இருந்து விலகாமல்  தாயக விதலைப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டார்
வீச்சுடனும் வீறுடனும் பணியாற்றிய அவரின் செயற்திறனைக் கண்டவர்கள் அவர் மீது  குறிவைத்து தங்கள் தேவையை நிறைவேற்றியுள்ளனர்.

கேணல் பருதி அவர்கள் வீரச்சாவடையும்வரை விடுதலைப்பணி
யுடனேயே இருந்தார். இம் மாவீரனின் இழப்பின் மூலம்  அவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர வேண்டுமென்ற பொறுப்பையே எம்மிடம் விட்டுச் செனறுள்ளார.; தமிழனத்துக்கு ஏற்பட்ட இந்த இழப்போடும் அம் மாவீரனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  பிரான்சு பணியகத்திற்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

நாமும் அவர்களது துயரத்தில் பங்கு கொண்டு அவர்களது கரங்களை இறுகப்பற்றி ஆறுதல் கூறுகின்றோம்
தன்னலமற்ற ஒரு விடுதலை போராளியாக தளபதியாக பொறுப்பாளியாக அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய கேணல் பருதி அவர்கள் தனது வீரச்சாவின் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களாகிய நாங்களே முன்னெடுக்க வேண்டுமென்ற  பணியை முன்னோக்கி முடுக்கி விட்டுள்ளார்.

விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரன் கேணல் பருதி அவர்களுக்கு இத்தாலித் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணியகமும் இத்தாலி வாழ் தமிழீழ மக்களும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - இத்தாலிப் பணியகம்
10.11.2012

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி மாவீரன் கேணல் பருதி அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்- இத்தாலிப் பணியகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com