வி.புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு
குழு பொறுப்பாளருமான பரிதி எனும் நடராஜா மதீந்திரன் மர்ம நபர்களால்
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவ.8ம் திகதி பாரீஸ் நகரின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுடப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், மாவீரார் நாள் நிகழ்வுகள் நெருங்கும் நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் சிறிலங்கா அரசின் புலனாய்வு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.
பரிதி மீது நடந்தேறிய படுகொலை சம்பவம், புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் மீதான தாக்குதல் என நாடுகடந்த தமிழீழ அமைப்பின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் தமது ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் :
ஈழத்திலும், பிராண்ஸிலும் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காக தன்னுடைய வாழ்க்கையையே ஆர்ப்பணித்த பரிதியின் அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன். 1980 களில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக களப்பணி ஆற்றியவர் பரிதி. 1990ம் ஆண்டில் காயமடைந்த நிலையில் சென்னைக்கு வந்து திரும்பினார். தற்போது அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியாரும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக வைகோ தனது இரங்கல் செய்தியில் :
நான் உயிராக நேசித்த வி.புலிகளின் தளபதிகளில் பரிதியும் ஒருவர். 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில், வன்னிக்காடுகளில் இடைவிடாத இந்திய-சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே, வான்வெளிக் குண்டு வீச்சுக்கும் பீரங்கி தாக்குதளுக்கும் ஊடே பிரபாகரனோடு நான் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம், கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின் போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போதே மனம் பாறையாய்க் கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்றபோது, மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்துக்குச் சென்றேன். அங்குதான் ஈழத் தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார்.
அந்த வீரத் திருமகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன். தலைமைக்கும், இயக்கத்துக்கும், தமிழ் ஈழ விடுதலை இலட்சியத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும்வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ் ஈழ இலட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு தொடர்பில்லை : தயான் ஜயதிலக்க
இதேவேளை வி.புலிகளின் சிரேஷ்ட தலைவர் பரிதியின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இக்கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை. பிரான்ஸ் அரசினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இவ்விவகாரங்களில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது. வி.புலிகளின் ஆதரவு தரப்பினரிடம் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது வெளிப்படையான விடயம். குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை பிரான்ஸ் அரசாங்கம் விரைவில் கைது செய்து உரிய தண்டனை விதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிதி கொலை விசாரணை பிரான்ஸின் உள்ளக புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றம்
இதேவேளை பரிதியின் படுகொலையை அடுத்து, பிரான்ஸில் உள்ள மேலும் சில வி.புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் மூத்த தலைவர்கள் தமக்கு போலீஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக பிரான்ஸ் காவல்தூறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த கோரிக்கை தற்போது தேசிய காவல்துறையினர் பிரிவிக்கு அனுப்புவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் தேசிய காவல்துறையினரிடமிருந்து, உள்ளக புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

0 Responses to மூத்த தளபதி பரிதியின் மரணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்