Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் ஞாயிறு(11) அன்று மாலை 6.00 மணிக்கு, பிரான்சில் படுகொலைசெய்யப்பட்ட, கேணல் பரிதியின்(றீகன்) இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரான பரிதியின் இரங்கல் கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வோடு கலந்துகொண்டனர். பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கமும், ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. பெருவாரியான மக்கள் இதில் கலந்துகொண்டு கேணல் பரிதி அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியைத் தெரிவித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, அவர்கள் கேணல் பரிதியின் திருவுருவப் படத்துக்கு பூக்களைத் தூவினார்கள். தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த கம்மியூனிஸ் கட்சித் தலைவர் த.பாண்டியன், விடுதலை ராஜேந்திரன், மே17 இயக்க திருமுருகன் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இதில் உறையாற்றிய த.பாண்டியன் அவர்கள், ஒரு இலட்சியத்துக்காகப் போராடும் போராளியின் கனவுகள் அழிவதில்லை எனக்கூறி, தேழர் பரிதி அவர்களைப் பற்றி பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய விடுதலை ராஜேந்திரன் அவர்கள் , புலிகள் தமிழ் நாட்டில் பயிற்ச்சிபெற்ற காலங்களையும், அப்போது இளைஞனாக இருந்த கேணல் பரிதி தொடர்பாகவும் விவரித்தார். பிரித்தானியாவில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மிகவும் நேர்த்தியாக இந்த இரங்கல் கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். இம் மாதம் 27ம் திகதி லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் மாவீரர் தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே நடத்தும் எனவும் அறியப்படுகிறது.

புலம்பெயர் தேசத்தில், கேணல் பரிதியின் வீரச்சாவு மேலும் விடுதலை வேட்க்கையை தமிழரிடையே தூண்டிவிட்டுள்ளது. தமிழர்களுக்கு மத்தில் எரியும் நெருப்பு ஒரு விடுதலையைப் பெற்றுத்தரும் !











0 Responses to லண்டனில் பரிதிக்கு இரங்கல்: ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com