Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவின் ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அமெரிக்கா அதிகப்படியான வாக்குகளுடன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் இலங்கைக்கு நெருங்கிய நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகியன அடுத்த ஆண்டின் ஐ.நா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அடுத்த மார்ச் மாதம் மீண்டும் மனித உரிமைகள் சபை கூடும் போது இலங்கை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைவாக அடுத்த மார்ச் மாதத்திற்குள் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் போது இலங்கைக்கு ஆதரவான நாடுகள் மனித உரிமைகள் சபையில் அவ்வருட அங்கத்துவ நாடுகளாக இல்லாது போனால், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் வலுப்பெற வாய்ப்பு அதிகம். இம்முறை பாகிஸ்தான் தெரிவாகியிருப்பது மட்டுமே இலங்கைக்கு ஆதரவான விடயமாக கருதப்படுகிறது.

இதேவேளையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவி செயலர் அலிஸ்ஸா ஜரிஸ் இவ்வாரம் இலங்கை செல்லவுள்ளார். இது, இலங்கை மனித உரிமை விவகாரத்தில் கண்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராய்வதற்காக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

0 Responses to ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபை புதிய உறுப்பு நாடுகளில் இணைகிறது அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com