Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இவ்வாரம் ஆரம்பிக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தேசித்திருப்பதுடன்,

இடதுசாரி கட்சிகள், பாஜக ஆகியவற்றின் ஆதரவை கோரியிருந்தார்.

எனினும் அவை ஆதரவு தெரிவிக்குமா என்பதில் தயக்கம் நிலவுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் குறைந்த பட்சம் 50 எம்.பிக்களின் ஆதரவு தேவை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 18 எம்.பிக்களே உள்ளனர். பாஜக, இடதுசாரிகளின் ஆதரவை பெற்றால் மாத்திரமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும். ஆனால் அப்படியே கொண்டுவந்தாலும் இப்போது, முலாயம் சிங் யாதவ், மாயாவதி கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு வலுவாக இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற வாய்ப்பு மிக குறைவென தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும், சமாஜ்வாத கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்ஜவாத கட்சியின் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் விருந்து வைத்து குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற ஆதரவை வலியுறுத்தினார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், பெரும்பான்மை பலத்துடன் அதை தோற்கடிப்போம் என சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மம்தா பானர்ஜி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மார்க்சிசிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது. ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால் அது மத்திய அரசுக்கு ஆதரவாகவே முடியும் என மார்க்சிசஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். அதே போன்று இடது சாரிகட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியாது என இப்போது தெரிவித்துள்ளன.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, அதிகரிக்கும் எரிவாயு, எரிபொருள் விலையேற்றம் என்பவற்றை கண்டித்தே மம்தா இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்தார்.

0 Responses to இடதுசாரி & கம்யூனிஸ்டு கட்சிகள் கைவிரிப்பு : மமதாவின் முயற்சி கேள்விக்குறியில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com