Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நியுயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் இந்த இரகசிய வாக்கெடுப்பில் அமெரிக்கா 131 வாக்குகளுடன் தெரிவானது.

ஜேர்மனி 127 வாக்குகளுடனும், அயர்லாந்து 124 வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டன.

இவை தவிர, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.

சிறிலங்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க மாட்டாது.

இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்கா எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும் போது, சிறிலங்கா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இம்முறை பாகிஸ்தான் தெரிவாகியிருப்பது மட்டுமே, சிறிலங்காவுக்கு ஆறுதலளிக்கக் கூடிய ஒரே விடயம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

0 Responses to ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா – சீனா, ரஸ்யா, கியூபா வெளியே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com