பயங்கரவாதச் செயற்பாடுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளில் அரச பயங்கரவாதம் மற்றும் அரசுகள் ஏவி விடும் பயங்கரவாதங்களை அரசாங்கங்கள் செய்கின்றன.
இன்னொரு வகைப் பயங்கரவாதத்தைத் தனி நபர்களோ
அல்லது குழுக்களோ தமது சுய நலன்களுக்காகவோ அல்லது தாம் சார்ந்த மக்களின்
விடுதலைக்காகவோ செய்கின்றன. ஹிட்லர் செய்தது அரச பயங்கரவாதம்.
சிறிலங்கா அரசுகள் செய்து வந்ததும் தற்போதைய அரசு செய்து வருவதும் அரச பயங்கரவாதம் மற்றும் அரசு ஏவி விடும் பயங்கரவாதம். மனப் பயத்தை உண்டுபண்ணும் போரையே சிங்கள அரசு புலம்பெயர் தமிழ் மக்களிடம் செய்து வருகிறது.
மனப்பயத்தை உண்டுபண்ணும் போரின் யுக்திகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை ஏவிவிட்டு கட்டவிழ்த்தப்படும் பயங்கரவாதத்தின் மூலமாகவே விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும், பின்னர் பிரான்ஸில் புகலிடம் கோரிய பின்னர் பிரான்ஸில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகக் கேணல் பரிதி அல்லது ரீகன் என அழைக்கப்படும் நடராஜா மதிதரன் நியமிக்கப்பட்டார்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் நகரில் 8-ஆம் தேதியன்று துப்பாக்கிதாரிகள் பரிதியைப் படுகொலை செய்து விட்டனர். இதைப் போன்றே 2006-இல் பிரான்ஸில் விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்களான நாதன் மற்றும் கஜன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இன்றுவரை பிரெஞ்சு அதிகாரிகள் தண்டனை பெற்றுத்தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்கள அரசினால் ஏவிவிடப்பட்ட கூலிகளினால் கடந்த வருடம் பருதி தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983-களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து களப் போராளியாகச் செயற்பட்டு வந்த இவர், 2003-ஆம் ஆண்டுக்கு பிரான்ஸ் வந்து அங்கு அரசியல் மற்றும் நிதி திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு 2007-இல் கைது செய்யப்பட்ட இவர் 2010-ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். நன்கு பயிற்சி பெற்ற நபர்களினாலேயே இப்படியான ஒரு தாக்குதலைச் செய்திருக்க முடியும் என்று கூறுகிறார்கள் அவதானிகள்.
பரிதி போன்றவர்களைக் கொல்வதனால் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு வகையான மனப் பீதியை உண்டுபண்ணி அதனூடாக புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை சிறிலங்கா அரசு பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடித்து செயல்படுகிறது போலும் சிங்கள அரசு. பல்வேறு வகையான மனப் பயங்களை ஈழ மக்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிறார்கள்.
பரிதி, நாதன் மற்றும் கஜன் போன்றவர்களைப் புலம்பெயர் தேசங்களில் கொல்வதன் மூலமாகப் புலம்பெயர் தமிழ் மக்களை மென்மேலும் ஈழத்தின் விடுதலைப் பயணத்தின் பாதையை நோக்கி விரிவுபடுத்துமே தவிர சிங்கள அரசுகள் நினைப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்பதனைச் சிங்கள அரசும், அதுனுடன் இயங்கும் கைக்கூலிகளும் உணர வேண்டும்.
தமிழீழத்தில் செய்த அட்டூழியம் போதாதாம்!
நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதியில் சிங்கள தேசம் தமிழ்த் தேசத்தை வெற்றி கொண்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக் கூறி வாண வேடிக்கைகளை விட்டு மகிழ்ந்தது சிங்கள தேசம். தமிழ் மக்களைப் புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டதாகக் கூறிய சிங்கள தேசம், ஹிட்லர் எவ்வாறு யூதர்களை அடைத்துவைத்துச் சித்திரைவதை செய்து கொலை செய்தாரோ அதைப் போன்ற பாணியிலேதான் மகிந்த அரசு தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துச் சித்திரைவதை செய்தது.
உள்ளூர் மற்றும் வெளியூர் பத்திரிகையாளர்களோ அல்லது தொண்டர் நிறுவனங்களோ பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டு, மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.
இதே வேளையில் கிழக்கு மாகாணத்திலேயோ அல்லது வன்னி தவிர்ந்த வடக்கின் பிற பகுதிகள் அனைத்திலும் சிங்களக் காட்டுமிராண்டி அரச படையினர் தமது கூலிப்படைகளுடன் இணைந்து தமிழ் மக்கள் மீது ஏவிய இன அழிப்பு செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒரு புறத்தில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுச் சித்திரவதை, மறுபுறத்திலோ திறந்த வெளிப் பிரதேசங்களில் பட்டப் பகலிலேயே பல இலட்சம் தமிழ் மக்கள் சித்திரவதைகளை அனுபவித்தே வந்தார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது இடம்பெறும் இது போன்ற சித்திரைவதைகள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.
தாயகத்தில் இன அழிப்பு போதாதென்று புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழ் மக்களைக் குறிவைத்து ஒரு படையையே வெளிநாடுகளின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது சிங்கள தேசம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாயகத்தில் வாழும் மக்களைச் சிங்களத்தின் காலடியில் விழ வைத்துவிட்டதாகிவிட்டது.
தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடும் வேலையில் ஈடுபடுகிறது சிங்கள அரக்கர் படை. இளைஞர் மற்றும் யுவதிகளைக் கவரும் விதத்தில் பல்வேறு விதமான பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்யுமாறு வற்புறுத்துகிறது சிங்களம். பள்ளிகூடங்களுக்கு அருகாமையில் மதுக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கிறது சிங்களம்.
பள்ளிச் சிறுவர்கள், வயோதிபர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரைத் தூண்டிவிட்டுக் காமவெறி தீர்க்கத் தமிழ் பெண்களை விலை மாதுக்களாக அனுப்புகிறது சிங்களம். இது போன்ற பல்வேறு விதமான தமிழ்ப் பண்பாட்டுக்கே ஒவ்வாத காரியங்களைச் செய்து வருகிறது சிங்களம்.
தமிழீழப் பகுதிகளில் செய்துவரும் இன அழிப்பு வேலைகளைச் சர்வதேச சமூகத்தின் கவனத்துக் கொண்டுவரும் புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து ஒரு படையையே புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி வைத்து மன ரீதியான பயத்தை உண்டுபண்ணிப் புலம்பெயர் தமிழரின் குரல்வளையை அடக்கி விடலாம் என்று கருதிக் களம் இறங்கியுள்ளது சிங்களம்.
தாகத்தை அடக்க தண்ணீரைக் கொடுத்து அடக்குவதே புத்திசாலித்தனம். அதைவிடுத்து தாகத்தை அடக்க தீவிரவாதச் செயற்பாடுகளைச் செய்து வன்முறை மூலமாக அடக்க எத்தனித்தால் நிச்சயம் தாகத்தோடு இருப்பவர் திருப்பி அடிக்கும் நிலையே உருவாகும். இதனைச் சிங்களம் உணர்ந்து செயற்பட்டால் சிங்கள தேசத்தை அழிவில் இருந்து காப்பாற்றலாம் என்பதே யதார்த்தமான உண்மை.
சர்வதேச நாடுகளுக்கே விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்
ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் மற்றொரு நாடு அரச பயங்கரவாதத்தையோ அல்லது ஏவி விடும் அரச பயங்கரவாதத்தையோ செய்ய முடியாது என்பது சர்வதேச சட்ட மரபு. பிரான்ஸ் என்கிற நாடு ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் பல உலக சரித்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், ஐரோப்பாவின் பெரிய நாடாகவும் இருக்கிறது.
பல நாடுகளைத் தனது ஆக்கிரமிப்பின்கீழ் கொண்டுவந்து பல காலங்களாக ஆண்ட நாடே பிரான்ஸ். இப்படியான வறாற்றுச் சரித்திரங்களைக் கொண்ட தேசத்தையே அச்சுறுத்துகிறது சுண்டக்காய் சிறிலங்கா என்று கூறும் போது நிச்சயம் பிரான்ஸ் தேசமே தலைகுனிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தமிழ்ச் செயற்பாட்டார்களான நாதன் மற்றும் கஜனும் பிரான்ஸில் வைத்து 2006-இல் கொலை செய்யப்பட்டார்கள். குற்றவாளிகளைப் பிரெஞ்ச் காவல்துறையினர் இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. பரிதியை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பருதியை கொலை செய்யும் நிகழ்வு நடந்தது. காயங்களுடன் உயிர் தப்பிய பரிதி இந்தத் தடவை பலியாகிவிட்டார்.
தனது காரியாலயத்தில் இருந்து மேலும் மூன்று பேருடன் வெளியே வந்து பேருந்து நிலையத்துக்கு அருகில் செல்லும் வேளையில் இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டுள்ளார் பரிதி. வெடிச் சத்தம் கேட்டவுடன் பரிதியுடன் வந்த மூன்று பேரும் தப்பிக்க, பரிதியைக் குறி வைத்தே 9MM துப்பாக்கி மூலமாக சுட்டுள்ளனர் கொலையாளிகள்.
பரிதி மீது மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளன. பரிதியைக் கொன்ற பின்னர் கொலையாளிகள் தப்பித்து விட்டார்கள். பரிதியுடன் சென்ற மூன்று நபர்களில் ஒருவரின் வாக்கு மூலத்தின் மூலமாகக் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
பிரான்ஸின் வர்டமான் பகுதியில் இருந்தே பரிதியைக் கொல்லுமாறு கட்டளை இடப்பட்டுள்ளது என்று பிரெஞ்சுக் காவலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். ஈருறுளியில் (மோட்டார் சைக்கிளில்) வந்தவர்கள் சுட்டுக் கொல்லவில்லை என்று பிரெஞ்சுக் காவலர்கள் கூறியுள்ளனர்.
பிரான்ஸின் உள்ளகப் புலனாய்வுத் துறையினரினால் விசாரிக்கப்பட்டு வந்த விசாரணையை வெளியகப் புலனாய்வுப் பணிகளை மேற்கொள்ளும் புலனாய்வுத் துறையினரிடம் தொடர்ந்தும் விசாரணையை மேற்கொள்ள பிரெஞ்சு அரசு பணித்துள்ளது. இதன் மூலமாக வெளிநாடு ஒன்றின் கைவரிசை இக் கொலையில் இருக்கிறது என்று பிரான்ஸ் அரசு கருதுகிறது.
இரு சிறிலங்காப் பிரஜைகளை பிரெஞ்ச் காவலர்கள் இக்கொலை தொடர்பாகக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இரு நபர்களும் 33 வயதுடையவர்கள் என்று தெரியப்படுத்தியுள்ளனர் பிரெஞ்ச் காவலர்கள். இவர்கள் இருவரும் வில்லனே செயின்ட் ஜார்ஜஸ் மற்றும் லா சப்பேல் என்ற இடங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய வீடுகளைச் சோதனையிட்டதில் கொலைக்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை.
கைதான இருவரும் விசாரணையின் போது கொலையில் தங்களுக்குப் பங்கில்லை என்று மறுத்து இருக்கின்றனர். ஆனால் 'லா பாரிசியன்” என்ற பத்திரிகையில் வெளியான செய்தியின் படி இந்த இருவரில் ஒருவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும், அவ்வாறு வாக்குமூலம் கொடுத்த நபர் பிரான்ஸில் இருக்கும் சிறிலங்காவின் தூதுவரின் உறவினர் மூலம் கொலையைச் செய்து முடிக்க 50,000 யூரோ பணம் பெற்று இருந்ததாகவும், நாடு திரும்பியதும் பல்வேறு அரச சலுகைகளை சிறிலங்கா அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் கூறியதாக அச் செய்தி தெரிவித்துள்ளது.
இக் கொலையானது பிரெஞ்சு தேசத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்பதனை உணர்ந்தாவது விசாரணையைத் துரிதப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் பிரெஞ்சு மண்ணில் இடம்பெறாமல் இருக்க வழி செய்ய வேண்டிய கடமை பிரெஞ்சு அரசுக்கு உண்டு. இதன் மூலமாக சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரச பயங்கரவாதத்துக்கு முடிவு உண்டாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் மாவீர் வாரம் தமிழர்கள் அனுஸ்டிக்க இருக்கும் வேளையில் இது போன்ற கொலைகள் மூலமாக மாவீர் நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று சிறிலங்கா அரசு கருதுகிறது போலும்.
ஒவ்வொரு இழப்பும் தமிழீழ விடியலுக்கு மேலும் உறுதியையே அளிக்கும் என்பதனைச் சிங்களம் உணராமல் இருப்பது பரிதாபமாக உள்ளது. அரச பயங்கரவாதத்தையும், அரசு ஏவி விடும் பயங்கரவாதத்தையும் தாயகத்தில் மேற்கொண்டதும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதும் போதாது என்று அரசு ஏவி விடும் பயங்கரவாதத்தைப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் மேற்கொண்டு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மனப் பயத்தை உண்டாக்குவதன் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் கொடுத்து வரும் அழுத்தத்தை நிறுத்திவிடலாம் என்று மகிந்த கருதுகிறார் என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு விரைவில் ஒரு முடிவு கட்ட சர்வதேசச் சமூகம் முன்வர வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது.
இத்தருணத்திலேயே சிங்கள அரசு மனப் பயத்தை உண்டாக்கும் போரை புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் செய்து வருகிறது. ஒரு பிரபாகரனை அழிக்க முற்பட்டால் பல நூறு பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பதனைக் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு அறிஞர்கள் கூறி வந்தது போன்று, பரிதி போன்ற தமிழ்ச் செயற்பாட்டாளர்களைக் கொலை செய்வதன் மூலமாகப் பல்லாயிரம் பரிதிகளை உருவாக்க வழி அமைத்துக் கொடுக்கிறது சிங்கள அரசு.
பரிதியின் வீர மரணத்துக்கு உலகத் தமிழர்கள் தமது வீர வணக்கங்களை செலுத்தி, மென்மேலும் பல பருதிகளை உருவாக்கும் வேலைகளைச் செய்வோமாக.
nithiskumaaran@yahoo.com

0 Responses to புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மனப்பயத்தை உண்டுபண்ணும் போர் விரிவடைகிறது: அனலை நிதிஸ் ச. குமாரன்