Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்கிழக்காசிய நாடுகளுக்கான விஜயத்தை நேற்றுத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தனது 6 மணித்தியால மியான்மார் விஜயத்தின் போது மியான்மாரின் அதிபர் தெயின் செயின் ஐயும் எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூகியை அவரது இல்லத்திலும் சந்தித்தார்.

முன்பு சர்வதேச சமூகத்தால் விலக்கப்பட்டிருந்த நாடான மியான்மார் இன்றைய சூழ்நிலையில் அங்கு ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு ஏனைய நாடுகளுக்கு எடுத்துக் காட்டான பாதையில் பயணித்திருப்பதாக ஒபாமா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நீண்ட கால அரசியற் சிக்கல்கள் நிறைந்த நாடான மியான்மாருக்கு விஜயம் செய்த முதலாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையை இப்பயணத்தின் மூலம் ஒபாமா பெற்றுள்ளார். மேலும் இவரை வரவேற்க 10 000 பொது மக்கள் வரை வீதியில் திரண்டிருந்தனர். ஒபாமா பொது மக்கள் முன் 30 நிமிட உரையை ஆற்றுகையில் ஆங் சான் சூகியை பாராட்டி பேசினார்.

மேலும் அவர் பேசியபோது : இங்கு ரங்கூனில் இருந்து ஆசியாவுக்கு நான் தெரிவிக்க விரும்புவது, நாம் நமது இறந்த கால சிறை வாழ்க்கையால் மட்டுப் பட்டிருக்கத் தேவையில்லை. எதிர்காலம் குறித்த முன்னேற்றகரமான வழிகள் மூலம் பயணிக்க வேண்டும். மியான்மாரில் தற்போது முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்நாடு ஜனநாயகப் பாதையிலேயே மேலும் பயணித்தால் அமெரிக்காவுடனான நல்லுறவு மேலும் வலுப்படும்' என்றார்.

ஒபாமா மியான்மார் விஜயத்தை அடுத்து கம்போடியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டுக்குச் செல்கின்றார். கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது அமெரிக்க அதிபர் கூட ஒபாமா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மியான்மாரின் ஜனநாயகப் பாதையை பாராட்டிப் பேசிய ஒபாமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com