தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினர் பரிதி
பிரான்சில் சுடப்பட்டமை தொடர்பாக சில தகவல்கள் கசிந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கிலமோ இல்லை சிங்களமோ தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு கோத்தபாயவின் சிறப்பு பணிப்பின் பெயரில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, முதன் முதலாக சிங்கள ஊடகம் ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது.
தமிழ் ஊடகங்கள் சில இச் செய்தியைப் பிரசுரித்தாலும், அதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தமிழ் இளைஞர்கள் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் பாவிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9mm என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இலகுரக ஆயுதங்களைப் பாவிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அச் சிங்கள ஊடகம் மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, நேற்றைய தினம் இரவு பிரான்சில் புலிகளின் முன்னாள் தளபதி நடு வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியும் தமிழர்களை உலுக்கியுள்ளது.
மாபியா கும்பல் பாணியில் இப்படுகொலை நடந்தேறியுள்ளது. பரிதி என்று அழைக்கப்படும் றேகன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 80 பதுகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அக்காலப் பகுதியில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பயிற்சியினை வழங்கி வந்தது.
அணி.... அணியாக இந்தியா சென்று பயிற்சி எடுத்து நாடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள் விடுதலைப் புலிகள். அக்காலப் பகுதியில் 2 வது அணியில் சென்று ஆயுதப் பயிற்சி எடுத்தவர் றீகன் ஆவார். பின்னர் அவர் 1990 ஆண்டு முதல் பிரான்ஸ் வந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இன்றுவரை செயற்பட்டு வந்தவர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக புலத்தில் போராடிய போராளி! இன்று நடுத்தெருவில் வைத்து சுடப்பட்டுள்ளார் என்பது தமிழர்களை உலுக்கும் செய்தியாக மட்டும் அமையவில்லை. மாறாக ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்.
கொல்லப்பட்ட விதத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் என்ன?
நேற்றைய தினம், பிரான்சின் புறநகர் பகுதியில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்த றீகன், பஸ் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகாமையில் செல்லும்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் சுடப்பட்டுள்ளார். கறுப்பு நிற தலைக் கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் றீகனை நோக்கி 2 தடவைகள் சுட்டுள்ளார்.
உடனே நிலத்தில் விழ்ந்த றேகனுக்கு அருகாமையில் வந்து, மீண்டும் அவர் மீது 2 தடவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். கொலையாளி பாவித்தது இலகுரக கையடக்க துப்பாக்கி ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பலர் நடமாடும் இடத்தில், இவ்வாறு றீகனைச் சுட்டுவிட்டு, பின்னர் அவர் உயிர் பிழைக்கக்கூடாது என்று அருகில் சென்று மீண்டு அவர் மார்பு மீது சுடும் அளவுக்கு கொலையாளி தைரியமாக இருந்திருக்கிறார். தான் தப்பிச் செல்வது குறித்து, யோசிப்பதை விடுத்து, றீகன் உயிரிழக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது.
இதில் இலங்கைப் புலனாய்வின் பங்கு என்ன?
சமீபகாலமாக றீகன் அவர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் புதிதாக முளைத்த சில குழுக்கள் இவரை அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக றீகன் சுடப்பட 2 நாட்களுக்கு முன்னதாகக் கூட, அவரை அழைத்து ஒரு குழு மிரட்டியுள்ளது. இந் நிலையில் றீகனை சுடவேண்டும் என்ற அவசியம் ஏன் வந்தது என்று அனைவரும் கேட்க்கலாம். இதில் நாம் சில விடையங்களை தெரிந்துகொள்வது நல்லது.
பிரித்தானியா, ஜேர்மன், நோர்வே போன்று நாடுகளில் ஒருவர் மீது இவ்வளவு இலகுவாக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது. காரணம் அங்குள்ள கடும் சட்டதிட்டங்கள் ஆகும். மற்றும் அந் நாட்டுப் பொலிசார், குற்றச்செயல்களைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகள். இலகுவில் குற்றவாளி தப்பிக்க முடியாது. ஆனால் பிரான்ஸ் நாடு அப்படியல்ல. மாதம் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெறும் ஒரு நாடாக அமைந்துள்ளது.
இதேவேளை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தை இணைக்கும் எல்லைப் பகுதியில், இலகுரக ஆயுதங்களை குறைந்த பணத்திற்கு வாங்க முடியும். அங்கே பல அறிவிக்கப்படாத ஆயுதக் கடத்தல் காரர்கள் இருக்கிறார்கள். இவர்களூடாகவே ஆயுதங்கள் பிரான்ஸ் எல்லையை அடைகிறது. சுமார் 300 யூரோக்களுக்கு கைத்துப்பாக்கி வாங்க முடியும் என சில பிரெஞ்சுப் பத்திரிகைகள் முன்னர் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களை மிரட்டவும், மாவீரர் தினத்தை குழப்பவும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, பல திட்டங்களை தீட்டியுள்ளது என அறியப்படுகிறது. ஏற்கனவே மாவீரர் தினத்தை இரண்டாக உடைக்க தமது ஆட்களை அவர்கள் அனுப்பி புலத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் நடைபெற்ற மாவீரர் தினங்களுக்கும் மக்கள் சென்றார்கள்.
மக்கள் மாவீர்களை மதிப்பதால், அந் நிகழ்வு தடையின்றி நடைபெறுகிறது. இந் நிலையில் இதனை உடைக்க வேறு வழிகளில், திட்டம் தீட்டிய இலங்கைப் புலனாய்வுத் துறை, குற்றங்கள் இலகுவாக நடைபெறும் பிரான்ஸ் நாட்டை தனது களமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இலங்கை அரசின் பின் புலத்தில், அவர்களுடன் இணைந்து செயல்படும், குழு ஒன்றின் ஆதரவுடனேயே இப் படுகொலை நடந்தேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இரு நபர்கள் உள்ளபோதும், கொலையாளி தலைக் கவசம் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காணுவதில் சிரமங்கள் இருக்கிறது.
கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வீதியில் ஏற்படுத்திய டயர் கீறல் அடையாளம், மற்றும் வீதியோர CCTV கமராக்கள் போன்றவற்றை வைத்து பொலிசார் தமது புலனாய்வு விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் பொலிசாரின் அறிக்கையை, எடுத்து பிரித்தானிய (லண்டன் ஸ்காட்லன் யாட்) பொலிசாரிடம் கொடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக் கொலை தொடர்பாக ஸ்காட்லன் யாட் பொலிசார் விரைவில் பிரெஞ்சுப் பொலிசாரை தொடர்புகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கை அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாத இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் குழு ஒன்று புலத்தில் ஊக்குவிக்கிறது. சரியான தகவல்கள் கசியும் பட்சத்தில் அவற்றை விரைவில் வெளியிட உள்ளது.
பிரெஞ்சுப் பொலிசாருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் வழங்கிய சில தகவல்களுக்கமைய இச் செய்தி எழுதப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும். இலங்கை அரசின் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் இக் குழுவின் அச்சுறுதலுக்கு மத்தியில் மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, மிகவும் எழுச்சியுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசின் திட்டங்கள் எதுவும் புலத்தில் தோல்வியைத் தான் தழுவும் என்பதனை, இம் முறை மக்கள் இலங்கை அரசின் கன்னத்தில் அடித்து தெளிவுபடுத்துவார்கள் !

0 Responses to பிரான்சில் சுடப்பட்ட விடுதலை புலிகளின் மூத்த தளபதி றீகன்: வெளிவந்த சில புலனாய்வுத் தகவல்கள்