காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் தம்மை வேண்டும் என்றேதான் துப்பாக்கியால் சுட்டார் என்று நீலாங்கரை சிறுவன் கூறியுள்ளான்.
கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதி நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப் பட்ட 16 வயது சிறுவன் ஒருவனை, நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ், தமது துப்பாக்கியால் சிறுவனின் தொண்டையில் சுட்டு உள்ளார். தொண்டையில் குண்டு பாய்ந்து கழுத்து வழியாக குண்டு வெளி வந்த நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.
இதை வழக்காகப் பதிவு செய்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது. சிறுவனின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து சிறுவனின் உடல்நிலை தேறிய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சிறுவன், காவல்துறை ஆய்வாளர் தெரியாமல் துப்பாக்கி சுட்டு விட்டது என்று கூறியுள்ளது பொய் என்றும், அவர் வேண்டும் என்றேதான் என்னை சுட்டார் என்றும் கூறியுள்ளான்.

0 Responses to "புஷ்பராஜ் என்னை வேண்டுமென்றேதான் துப்பாக்கியால் சுட்டார்": நீலாங்கரை சிறுவன்