ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பில், தமிழக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு விரைந்து வரலாற்று முக்கியம் வாய்ந்த முடிவினை எடுத்து, நீதியினை நிலைநாட்டியுள்ள செய்தியினை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களது இதயபூர்வமான நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத்தமிழர்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் நெஞ்சத்தில் சுமந்திருந்த துயரைத்துடைத்த ஓர் உறுதியான நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கின்றோம். இவ்வாறான துணிச்சல் மிகு முடிவுகளை எடுத்து தமிழர்களைப் பாதுகாக்கின்ற அசாத்திய திறன் கொண்டவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளங்குவதையிட்டு நாம் பெருமிதம் கொள்ளுகின்றோம். அதுமட்டுமல்லாமல் நளினி, ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யவிருப்பதாக அறிவித்திருப்பது தங்களின் கருணை உள்ளத்தையும் தாயுள்ளத்தையும் வெளிப்படுத்துகின்றது.
ஏற்கனவே ஈழத்தமிழர்களின் அவலவாழ்வுக்குத் தீர்வாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை உலகத்தமிழர்கள் தங்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்;கும் பாத்திரமான தலைவராகப் போற்றிவருகின்றனர்.
எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கவிருக்கின்ற உறுதியான நடவடிக்கைகளே ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப்பெற்றுத்தரும் என்றும் நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழினப் படுகொலை புரிந்த சிங்கள இனவாத அரசுக்கு தொடர்ந்தும் துணைபோகும் மத்திய அரசினைத் தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு உங்களை அன்பாக வேண்டி நிற்கின்றோம்.
ஈழத்தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு குறித்தே உலகத்தமிழினம் இன்று பெரும் கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் பெரும் கனவு நனவாகும் என்று நாம் நம்புகின்றோம். தமிழ் இன வரலாற்றில் உங்கள் பெயர் நிச்சயமாகப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
கனடியத் தமிழர் தேசிய அவை
நோர்வே ஈழத்தமிழர் அவை
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
நெதர்லாண்ட் ஈழத்தமிழர் பேரவை
சுவிஸ் ஈழத்தமிழரவை
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை
மொரிஷியஸ் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பு
0 Responses to நீதி வழங்கி கண்ணீர் துடைத்தது மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை நெஞ்சார வாழ்த்துகின்றோம்