வடக்கில் இராணுவத் தேடுதல்களை நடத்தி மக்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம், அதனை கிழக்கிலும் முன்னெடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வடக்கில் புலிகள் மீள இணைகிறார்கள் என்று அரசாங்கம் அறிவித்து தேடுதல்களை நடத்தி மக்களை அச்சுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக கிழக்கின் கிராண், தன்னன்குடா, பாண்டிருப்பு, சித்தாண்டி ஆகிய பகுதிகளிலும் இராணுவம் தேடுதல்களை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல்களை நடத்துவதோடு, விசாரணை என்ற பெயரில் நீண்ட நேரமாக தடுத்து வைத்திருக்கும் சம்பவங்களும் அண்மைய தினங்களில் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கை தொடர்ந்து கிழக்கிலும் இராணுவம் தேடுதல்களில் ஈடுபடுகிறது: பா.அரியநேத்திரன்