வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தாக்குதல் தொடுத்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து 100 பள்ளிச் சிறுமிகளைக் கடத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
திங்கள் இரவு போர்னோ மாநிலத்தில் உள்ள சிபொக் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்குள் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கு ஹாஸ்டலில் தங்கி இருந்த இளம் பள்ளிச் சிறுமிகளை லாரிகளில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.
நைஜீரியப் பாடசாலைகளை அடிக்கடி குறி வைக்கும் மேற்குலகக் கல்வி தீமையானது என்ற கொள்கை உடைய போக்கோ ஹராம் தீவிரவாதிகள் இக்கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. திங்கட்கிழமை நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதம் நிகழ்ந்து 24 மணித்தியாலத்துக்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய மதக் கொள்கைகள் அடிப்படையில் தனி மாநிலம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போக்கோ ஹராம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திங்கள் இரவு 100 பள்ளிச் சிறுமிகள் கடத்தப் பட்ட சம்பவத்தை பிபிசி செய்திச் சேவைக்கு அரச அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியுள்ளார். எனினும் கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர் கடத்தப் பட்ட வாகனங்களில் இருந்து தப்பி தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதால் எத்தனை பேர் உண்மையில் கடத்தப் பட்டனர் என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது. முதற் தடவை பெற்றோர்கள் பிபிசிக்கு தகவல் அளிக்கையில் கடத்தப் பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 200 எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இதுவரை வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள 3 மாநிலங்களில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களில் 1500 பேர் வரை கொல்லப் பட்டுள்ளதுடன் இப்பகுதிகள் அவசரகால சட்ட ஆட்சி முறை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகளால் 100 பள்ளிச் சிறுமிகள் கடத்தல்