மாநிலமெங்கும் பணப்பட்டுவாடாவை செய்வதற்கு அதிமுகவினருக்கு இந்த 144 தடைச் சட்டம் பேருதவியாக இருக்கிறது என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவினர் வாக்காளர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதற்குக் காவல்துறையும் பேருதவியாக இருப்பதாகவும் புகார் அளிக்க, தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு வந்திருந்தார் ஸ்டாலின். அப்போது மேற்கண்டப் புகாரை தேர்தல் ஆணையர் பிரவீன்குமாரிடம் ஸ்டாலின் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் தமிழகம் எங்கும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு இன்று பணப்பட்டுவாடா செய்துவருவதாகக் கூறியுள்ளார். மேலும் ஒரு வாக்காளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது என்கிறத் தகவலையும் வெளியிட்டுள்ளார். இந்தப் பணப்பட்டுவாடாவுக்கு 144 தடை உத்தரவு பெரும் உதவியாக இருக்கிறது என்பதால், 144 தடையுத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும் தாம் கோரிக்கை வைத்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

0 Responses to அதிமுகவினருக்கு மாநிலமெங்கும் பணப்பட்டுவாடா செய்ய 144 தடை உத்தரவு வசதியாக இருக்கிறது!:முக.ஸ்டாலின்