ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படும் கசினோ சூதாட்ட அனுமதி சட்டமூலத்தினை ஆதரிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் கொண்டுவரும் இவ்வாறான சட்டமூலங்களை ஆதரிக்க முடியாது. இது, எமது கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமானதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் கசினோ சூதாட்டத்தை அனுமதிப்பது தொடர்பில் கடந்த ஆண்டே அரசாங்கம் சட்டத்திருத்தங்களைச் செய்ய எத்தணித்திருந்தது. ஆனாலும், பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து அந்தத் திட்டம் அப்போதைக்கு கைவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, மீண்டும் கசினோ சூதாட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

0 Responses to கசினோ சூதாட்ட சட்டமூலத்தை த.தே.கூ ஆதரிக்காது: இரா.சம்பந்தன்