Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிதியினை அமெரிக்க அரசாங்கம் இந்த முறையும் வழங்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இந்த வருடம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகளின் நலன்திட்டங்களுக்காக 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இலங்கை அகதிகளின் மத்தியில் பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தல், சுகாதர மற்றும் கல்வி வசதிகள், உட்கட்டுமான வசதிகள் என்பன வழங்கப்படவுள்ளன.

அத்துடன் உரிய ஆவணங்கள் அற்ற மக்களுக்கான ஆவண வழங்கல்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்கியது அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com