Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாயமான விமானத்தின் 2ம் சிக்னல்!

பதிந்தவர்: தம்பியன் 06 April 2014

மாயமான மலேசிய விமான கருப்பு பெட்டி தேடுதல் பணியில் 2வது முறையாக சிக்னல் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலாலம்பூரிலிருந்து கடந்த மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் சீனா புறப்பட்ட mh370 விமானம் மாயமானது குறித்து தற்போது வரை சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதன்பின் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்ததாக மலேசிய அரசு அறிவித்ததையடுத்து, மலேசியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமானங்கள் மற்றும் கப்பல்கள் அங்கு சென்று விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து நேற்று முதன்முறையாக சிக்னல் கிடைத்துள்ளது என்று சீன கப்பலான ஹைக்சன் 01 கண்டறிந்தது.

இதனைதொடர்ந்து சிக்னல் கிடைத்ததாக கண்டறியப்பட்ட பகுதியிலிருந்து 2 கி.மீற்றர் தொலைவில் இரண்டாவது முறையாக சிக்னல் கிடைத்துள்ளது.

மேலும், சீன கப்பல் கண்டறிந்த சிக்னலில் இருந்து 300 கடல் மைல்கள் தொலைவில் ஒரு வகை ஒலி எழுந்துள்ளது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரியும், இணை ஒருங்கிணைப்பு மைய கழகத்தின் தலைவருமான ஹூஸ்டன் கூறுகையில், தற்பொழுது கிடைத்துள்ள சிக்னல் மிக முக்கியமானது மற்றும் தேடுதல் பணியை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது என்றும் இந்த சிக்னல்கள் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வருவது தானா? என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மலேசிய விமானத்தின் சிக்னல் கிடைத்துவிட்டது?: சீனா தகவல்

0 Responses to மாயமான விமானத்தின் 2ம் சிக்னல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com