Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இராணுவமே தீர்வு என்று கருதியதாலேயே உள்ளநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 

ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றை த இண்டிபென்டன்ட் பத்திரிகை இன்று வெளியிட்டிருந்தது. இதில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

ருவாண்டாவில் இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைகளை தற்போதும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மீண்டும் நடத்திக் கொண்டிருப்பதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த மூன்று வருடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்காவிலும் இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவை அனைத்தும் இராணுவத்தின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையாலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகள் ராணுவத்தின் மீது வைக்கின்ற நம்பிக்கையில் இருந்து வெளியாகி, சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

சர்வதேசத்தை நம்பிய சீரா லியோன், திமோர் போன்ற நாடுகள் தங்களின் உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களுடனேயே தீர்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சிறிலங்காவும் தங்களின் பிரச்சினையை தீர்க்க சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறீலங்கா பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை நம்பியதால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் – மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com