Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேஷம்
வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள்

வந்து சேரலாம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

ரிஷபம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

மிதுனம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.

கடகம்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகம், தொழிலில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பணியாளர் தொல்லை அகலும். குடும்பச் சுமை கூடும்.

கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

துலாம்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

விருச்சகம்
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் திருப்தி தரும்.

தனுசு
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். விவாகப் பேச்சுக்கள் முடிவாகலாம். தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்
வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பயணத்தால் சிறு விரயம் உண்டு.

கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பரபரப்பாகச் செயல்படுவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் 23-04-2014 | Raasi Palan 23-04-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com