Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குருநகர் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் குறித்த வழக்கு விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் என யுவதியின் பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு பாதிரியார்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் உயிரிழந்த கொன்சலிற்றாவின் தாய், தந்தையிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். அதில் இரண்டு பாதிரியார்களின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளை முடித்துக் கொண்ட பொலிஸார், சம்பவம் தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

0 Responses to ஜெரோமி மரணம் வழக்கு தாக்கல்! பாதிரியார்களும் நீதிமன்றில் ஆஜர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com