கொழும்பு மொரட்டுவைப் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இன்று புதன்கிழமை துப்பாக்கி முனையில் கொள்ளையர்களினால் ஏழு இலட்சம் ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கொழும்பு கிருலப்பனையில் உள்ள தனியார் வங்கியொன்றில், கொள்ளையிட முன்னெடுக்கப்பட்ட முயற்சியொன்று இன்று முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். இதன்போது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
மோதலையடுத்து, கொள்ளையர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுவிட்டு வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த வாரம் கம்பஹா நீர்கொழும்பிலுள்ள நகைக் கடையொன்றில் நுழைந்த துப்பாக்கிதாரிகள் 30 இலட்சம் பெறுமதியான நகைகளையும், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to துப்பாக்கி முனையில் தொடரும் கொள்ளைகள்; மொரட்டுவை வங்கியொன்றில் 7 இலட்சம் கொள்ளை