Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் 71பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள பேருந்து நிலையமொன்றில் நேற்று காலை எதிர்பாரதவிதமாக குண்டு வெடித்தது. இதில் அங்கே பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த நூற்றுக்காண பயணிகளில் 71க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நியான்யா மோட்டார் பார்க் மற்றும் பல வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இத்தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் இருப்பினும் நைஜீரியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்திவரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பினர் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

0 Responses to நைஜீரியா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு : 71பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com