Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருநங்களைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்கிற மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று, இவ்வழக்குக்கான தீர்ப்பை  உச்ச நீதிமன்ற நீதிபதிகள வழங்கியுள்ளனர். அதன் படி திருநங்கைகளும் இந்திய நாட்டு குடிமக்கள்தான் என்றும். அவர்களை 3ம் பாலினத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இன்னும் 6 மாத காலத்துக்குள் அவர்களை சட்டப்படி 3ம் பாலினமாக சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும், அவர்களுக்கு கல்வி வேலைவாய்புக்களில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. அதோடு சமூகம், பொருளாதாரம் இவைகளில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம்,   இவைகளை வழங்கி சமூகத்தில் அனைவருக்கும் சமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

0 Responses to 'திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்க வேண்டும்' : உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com