ராகுல் காந்திக்கு எதிராக, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் பொது கருத்து தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ், ராகுல் காந்தி, தலித்துக்களின் வீடுகளுக்கு சென்றுவந்ததை, பிக்னிக் மற்றும் ஹானிமூனுக்கு சென்றுவந்ததாக கூறினார்.
மேலும், ராகுல் காந்தி இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் அவரால் ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்து கொள்ளக் கூட முடியவில்லை. அவர் சோனியா காந்தியின் உதிரி கூட இல்லை. வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து கொள்வது ராகுல் காந்தி பிரதமராகும் வாய்ப்பைக் குறைத்துவிடும் என சோனியா காந்தி அஞ்சுகிறார். அதனால், ராகுலுக்கு பதவியை கொடுத்துவிட்டு, அதன் பின்னர் வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து வைக்க அவர் முடிவெடுத்துள்ளார் என்றார்.
அதேவேளை நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாபா ராம்தேவ், நரேந்திர மோடியை போன்று எந்தவொரு அமைச்சரும் இதுவரை வேலை செய்ததில்லை என்றார்.
ராகுல்காந்திக்கு எதிரான பாபா ராம்தேவின் கருத்துக்களை கண்டித்தே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அராஜகமான பேச்சுக்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப் போவதில்லை. மக்கள் பதில் சொல்வார்கள் என ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

0 Responses to ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? : பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்துக்கள்