Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம் முழுவதும் மே மாதம் 1ம் திகதி உழைப்பாளர்கள் தினத்தை அதிமுக சார்பில் வெகு கோலாகலமாகக் கொண்டாட, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தமது தொண்டர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அறிக்கையில், உழைப்பவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற நாள் மே முதல் தினமாகும். உழைப்பவர்களுக்கும் மகிழ்வு, விடுமுறை உண்டு என்று உலகிற்கு உணர்த்திய தினம் மே முதல் தினம். தொழிலாளர்கள் அனைவரும் நல்வாழ்வு பெற்று வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்பற்காக, மே 1ம் திகதி கொண்டாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக அமைப்பு ரீதியாக கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்களில் மேடைப் போட்டு சிறப்பு விழாவாக உழைக்கும் மக்கள் தினத்தைக் கொண்டாட  வேண்டும் என்றும் ஜெயலலிதா கழகத் தொண்டர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

0 Responses to மே 1 தினத்தை கோலாகலமாகக் கொண்டாட தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com