Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால் ஒரு பெண்தான் முதல்வராவார் என்று ராகுல்காந்தி சூசகத் தகவல் வெளியிட்டுள்ளார்.

ராகுல்காந்தி கடந்த இரண்டு நாட்களாக தெலுங்கானாப் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்களிடையே பேசிய ராகுல், தெலுங்கானா மாநிலத்தை  காங்கிரஸ்தான் உருவாக்கியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றால் இங்கு ஒரு பெண்தான் காங்கிரஸ் முதல்வராவார் என்று கூறியுள்ளார். ராகுலின் இந்த  பேச்சால் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருந்தாலும், பல தலைவர்களும் ராகுலின் முடிவையே வரவேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல்காந்தியின் இந்த பேச்சால் தெலுங்கானா பகுதி பெண் வேட்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள், களத்தில் உள்ள முக்கிய நட்சத்திர வேட்பாளர்களான விஜயசாந்தி, ஜெயசுதா கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to காங்கிரஸ் வென்றால் பெண்ணொருவரே முதல்வர்?: ராகுல்காந்தி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com