தொடர்ந்து 10 வருடங்களாக தாம் வசித்து வந்த 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்தை காலி செய்ய உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
மொத்தம் 9 கட்டங்களாக நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் 6 கட்டத் தேர்தல்கள் மட்டுமே தற்போது முடிவடைந்துள்ளது.9 கட்டத் தேர்தல்களும் முடிவடைந்து மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே தமது ரேஸ்கோர்ஸ் இல்லத்தைக் காலி செய்ய்யவுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் வாழ்ந்த 8 எண் கொண்ட மோதிலால் நேரு சாலையில் உள்ள இல்லத்துக்கு செல்லவுள்ளார் என்றும், அதற்கான பணிகள் துவங்கிவிட்டன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எண் 5 கொண்ட இல்லத்தை முதலில் பார்வையிட்ட மன்மோகன் சிங்கின் மனைவிக்கு அந்த இல்லம் பிடிக்காமல் போனதால், 8 எண் கொண்ட டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித் வாழ்ந்த இல்லத்துக்கு செல்லவுள்ளனர். தற்போது மன்மோகன் சிங் குடிபெயரவுள்ள இந்த இல்லத்தில் 4 படுக்கையறைகள், புல்வெளி தரைத்தளம், பணியாளர்களுக்கு உள்ளேயே குடியிருப்பு என்று சகல வசதிகளும் உள்ளன என்பதுக் குறிப்பிடத் தக்கது. இந்த இல்லத்தில்தான் அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் 15 ஆண்டுகளாக வசித்தார்.

0 Responses to தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் இல்லத்தைக் காலி செய்கிறார் பிரதமர்!