Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை ரத்து என்பதை, உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை அடுத்து தமிழக அரசு முருகன் உள்ளிட்ட மூவர் மற்றும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளதோடு, முருகன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்தது.

இதில் தூக்கு தண்டனை ரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மூவருக்கும் தூக்கு இல்லை என்பதையும் இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை ரத்து என்பதை உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com