மார்ச் 2011 இல் ஆரம்பித்த சிரிய உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப் பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 150 000 ஐ விட அதிகம் என பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற அமைப்பான NGO தெரிவித்துள்ளது.
மேலும் ஏப்பிரல் 1 ஆம் திகதி சிரிய யுத்தத்தில் 8000 சிறுவர்கள் கொல்லப் பட்டிருப்பதாக சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் புள்ளி விபரத்தில் அரச படையைச் சேர்ந்த 58 000 பேரும் எதிரணியினரான கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 38 000 பேரும் யுத்தத்தில் இதுவரை கொல்லப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் லெபனானின் ஷைட்டி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஹெஸ்பொல்லா போராளிகளில் 364 பேர் கொல்லப் பட்டதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2011 மார்ச்சில் சிரியாவில் குழப்பம் தொடங்கும் போது அரசுக்கு எதிராக அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்களாகவே ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்டத்தின் போது அரச படைகளுடன் ஏற்பட்ட மோதலில் சில பொதுமக்கள் கொல்லப் பட்டதாலேயே எதிரணியினர் ஆயுதம் ஏந்தினர். தற்போது இலட்சக் கணக்கான உயிர்களைக் குடித்த மக்கள் யுத்தமாகவும் இது மாறித் தொடர்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
0 Responses to சிரிய மக்கள் யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 150 000 ஐ விட அதிகம்: NGO