Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் இன்னமும் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையிலான விசாரணைக்குழு இலங்கைக்குள் வர முயற்சிக்கிறது. ஆனாலும், அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் விசா அனுமதியை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக் குழு தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு விசா அனுமதியை வழங்குவது குறித்து எதுவும் கூற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com