Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனிக்கிழமை வடகிழக்கு நைஜீரியாவின் தலைநகர் யோபே இல் இருந்து 105 Km தொலைவில் புனி காரி எனும் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வாசல் ஒன்றில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் திடீரெனப் புகுந்து நிகழ்த்திய தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர்.

இது குறித்து யோபே ஆளுனரின் பேச்சாளர் அப்துல்லாஹி பேகோ கூறுகையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 அப்பாவி உயிர்கள் கொல்லப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இப்பள்ளிவாசலில் உள்ளே முஸ்லிம்கள் அதிகாலைப் பிரார்த்தனையை நிகழ்த்த சற்று நேரத்துக்கு முன்னர் போக்கோ ஹராம் துப்பாக்கிதாரிகள் அவர்கள் மீது சராமரியாக சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிவாசலை சேதமாக்கி அதனையும் அருகிலுள்ள கட்டடங்கள் சிலவற்றையும் தீக்கிரையாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க நைஜீரிய அரசு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவத்தை நேரில் கண்ணுற்ற உள்ளூர் விவசாயி ஆன ஹருனா முஸ்தஃபா கருத்துத் தெரிவிக்கையில் இஸ்லாம் சமயத்துக்கு எதிராகவும் அது வலியுறுத்தும் சகோதரத்துவ போக்குக்கு எதிராகவும் கொள்கை உடையவர்கள் தாம் என்பதை இத்தாக்குதல் மூலம் போக்கோ ஹராம் அமைப்பினர் மறுபடியும் நிரூபித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு இலக்காகி வரும் முக்கிய நகர்களாக யோபே, போர்னோ மற்றும் அடமவா ஆகியவை திகழ்கின்றன. இவ்வருடத் தொடக்கத்தில் மத்திய அரச பள்ளி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த 40 பள்ளிச் சிறுவர்கள் போக்கோ ஹராமின் கொடூரத் தாக்குதலில் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வருடம் ஆரம்பித்ததில் இருந்து முதல் 3 மாதங்களுக்குள் போக்கோ ஹராம் தாக்குதலில் 1000 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர்.

0 Responses to நைஜீரியப் பள்ளிவாசலில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 20 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com