Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்த இலங்கை அரசாங்கம் அடுத்ததாக, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர்ந்த மக்களின் தமிழ் தேசிய செயற்பாடுகளில், வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.

இதன்அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் தடை செய்துள்ளது.

இந்த நிலையில் விரைவில் இவ்வாறான ஊடகங்களை உத்தியோகபூர்வமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 Responses to வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழ் ஊடகங்களுக்கும் விரைவில் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com