Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்கானிஸ்தானில் நாளை சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கோஸ்ட் மாகாணத்தின் த்னாய் மாவட்டத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் கமாண்டர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார்.

இதில் ஒருவர் பலியானதுடன் மற்றவர் படுகாயம் அடைந்தார்.

இத்துப்பாக்கிச் சூட்டில் பலியான 48 வயதுடைய பெண் பத்திரிகையாளர் AP பத்திரிகை நிலையத்தின் புகைப்படவியலாளரான அஞ்சா நியெட்ரின்காவுஸ் எனவும் படுகாயமடைந்த மற்றையவர் 60 வயதுடைய பெண் நிருபரான கேத்தி கன்னொன் எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இப்பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த கார் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைய எத்தனித்ததால் போலிஸ் கமாண்டர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இத்தாக்குதலை மேற்கொண்ட குறித்த அதிகாரி தற்போது சரணடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. எனினும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட தாக்குதலா என்ற தகவல் இன்னமும் வெளிவரவில்லை.

இச்சம்பவத்தில் பலியான ஜேர்மன் புகைப்படவியலாளர் குவைத், ஈராக், லிபியா, காஸா மற்றும் வெஸ்ட் பேங்க் ஆகிய குழப்பம் நிலவிய பகுதிகளில் மிகத் திறமையாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு!:ஒருவர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com