வடக்கு மாகாண சபையை சீராக இயங்கவிடாமல் இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வடக்கில் ஆங்கிலக் கல்வியை அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காகவே வந்துள்ளார். அவர், அரசியல் பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனாலும், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு இலங்கையை ஆளும் மத்திய அரசாங்கம் விடுக்கும் இடையூறுகள் தொடர்பில் விளக்கியுள்ளேன் என்று சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையை இயங்கவிடாமல் மத்திய அரசாங்கம் தடுக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்