Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்த தேர்தல் எனது கடைசி நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கலாம் என திமுக தலைவர் கருனாநிதி உருக்கமாக பேசியுள்ளார்.

 கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி இவ்வாறு தெரிவித்தார். மேலும், திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. இன எழுச்சிக்காக, இன உணர்வுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்.

மக்களுக்கான நல்லாட்சியை தரவேண்டிய கால கட்டாயத்தில் உள்ளோம். தமிழகத்தின் பண்பாடுகளை பாதுகாக்க உயிரையும் கொடுப்போம். தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு வாக்களித்தீர்கள் எனில் தமிழ்நாடு பொட்டல்காடாக மாறிவிடும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆனால் ஆட்சி புரிய எண்ணம் கொண்டு மோடி நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை.

இந்தியாவுக்கு உள்ள சிறப்பே கட்டிக்காத்த உறவுகள்தான். நாம் கட்டிக்காத்த வீரம்தான். தேர்தலிலே தோற்காதவர்கள் யார்? தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை ஆண்டு முடித்து விட்டார்களா? இல்லை. நம்முடைய லட்சியங்கள் ஈடேற வேண்டும் என்றால் மொத்த தமிழ் இனமும் அதற்கான போர்க்குரலை எழுப்ப வேண்டும் என்றார்.

0 Responses to இந்த தேர்தல் எனது கடைசித் தேர்தலாக இருக்கலாம்: கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com