அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவிக்கையில்:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட அனைத்து சர்வதேச தரப்பினருடன் இணைந்து செயலாற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என்று நாம் நம்புகின்றோம். அத்துடன், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி அதன் பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்துள்ளோம் என வில்லியம் ஹேக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் - வில்லியம ஹேக் நம்பிக்கை!