தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான தடையின் முதல் கட்டமாக, வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளது.
சுமார் 16 அமைப்புகள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 400 பேரின் விபரங்களும் வெளியிடப்படவுள்ளது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு உதவி வழங்கியதாக கூறபட்டும், இந்த அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்தும் அவை தடை செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:
1. நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2. கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3. விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4. விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா,பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள் தொடர்பில் இந்த வாரம் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் யுத்தக் குற்றம் கோரிய பிரேரணைக்கு முகம் கொடுக்கும் ராஜதந்திர முன்னெடுப்பின் பொருட்டு இந்த தடை அமுலாக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசாங்கம் தடைவிதித்துள்ள அமைப்புக்கள்
01. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
02. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)
03. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC)
04. பிரித்தானித் தமிழர் பேரவை (BTF)
05. உலகத் தமிழர் இயக்கம் (WTM)
06. கனேடியன் தமிழர் காங்கிரஸ் (CTC)
07. அவுஸ்ரேலியன் தமிழர் காங்கிரஸ் (ATC)
08. உலகத் தமிழர் பேரவை (GTF)
09. கனேடியத் தேசிய மக்கள் அவை (NCCT)
10. தமிழத் தேசிய சபை (TNC)
11. தமிழ் இளையோர் அமைப்பு (TYO)
12. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)
13. நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE)
14. தமிழீழ மக்கள் அவை (TEPA)
15. உலகத் தமிழ் மறுவாழ்வு நிதியம் (WTRF)
16. தலைமைச் செயலகக் குழு (HG Group)
0 Responses to 16 புலம்பெயர் அமைப்புக்களுகளைத் தடை செய்தது சிறீலங்கா அரசாங்கம்!