Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு பெற்றது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய முன்னால் துணைத் தூதர் தேவயானி கொப்ரகடே மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேவயானி கொப்ரகடேவும் அவரது தந்தையும் ஏற்கனவே வீடு இருப்பதை மறைத்து, மும்பையில் உள்ள அரசு ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக வீடு பெற்று இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல் வெளியாகியிருந்தது.

இதை அடுத்து சிபிஐ விசாரணையில் ஈடுபட்டது. இந்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேவயானி மீதும், அவரது தந்தை மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணையைத் துவக்க உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க அரசு தேவயானி மீது பணிப்பெண்ணுக்கு விசா பெறுவதில் மோசடி செய்தது தொடர்பாக வழக்குத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையும் நடைபெற்ற நிலையில், அமெரிக்காவிலிருந்து தேவயானியை அந்நாட்டு அரசு வெளியேற்றிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பாகத் தேவயானி கொப்ரகடே மீது சிபிஐ வழக்கு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com