Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்களை இந்தியா மீண்டும் ஏமாற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையிலுள்ள தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வந்தாலும், தமிழ் மக்கள் இந்தியா மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனிடையே, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் இந்தியா நிலைகொள்ள வேண்டி ஏற்பட்டால் அதற்கு வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு வேண்டும். அதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்தியா தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றியுள்ளது: எம்.கே.சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com