Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கரூரில் திமுக வேட்பாளர் ம. சின்னச்சாமியை ஆதரித்து நடிகை குஷ்பு அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு வேனில் நின்றபடி பிரசாரம் செய்துள்ளார்.

கரூரில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னச்சாமியை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோது சரியாக டாஸ்மாக் கடை ஒன்றுக்கு எதிரே நின்றபடி பேசியுள்ளார்.

குஷ்பு வந்திருக்கிறார் என்று கடைக்குள் செய்தி பரவியதும், குடித்துக் கொண்டிருந்த குடிகாரர்கள் எல்லாம் பாட்டிலும் கையுமாக ஓடி வந்து குஷ்பு பேசுவதை ஆவலோடு வேடிக்கை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

குஷ்பு பேசிய இடம் டாஸ்மாக் கடைக்கு முன்பாக என்பதால் திமுகவினர் பலரும் அதிருப்தியடைந்தனர்.

0 Responses to குஷ்பு வந்துட்டாங்க: வெளியே ஓடிவந்த குடிமகன்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com