குருநகர் யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழலைப்பயன்படுத்தி மனித உரிமைகளிற்காக குரல் எழுப்பி வரும் ஆயர்கள் மற்றும் வணபிதாக்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையொன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய யாழ்.மாவட்ட புதிய இராணுவத் தளபதி உதய பெரேரா தலைமையில் அணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த அணியே இரவு வேளையில் ஆயர் இல்லம் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அத்துடன் குறித்த யுவதி தேவாலயத்தில் வைத்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டே படுகொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டுள்ளதாகவும் கட்டுக்கதைகளை பரப்பி வருவதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு மதகுருமாரும் தலைமறைவாகி இருப்பதாக இன்று புதிய தகவல்களையும் கசியவிட்டுள்ளனர். அத்தகவலில் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோமி கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரின் மரணத்துக்கு யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் உள்ள இரண்டு பாதிரியார்களே காரணம் என்றும் இந்த நிலையில் இந்த வழக்கு நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் பின்னர் இரண்டு பாதிரிமாரும் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பி சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த யுவதி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவில்லையென்பதை சட்டவைத்திய அதிகாரி தனது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார். அத்துடன் குறித்த மதகுருமாரை நீதிமன்றினில் ஆஜர்படுத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள ஆயர் இல்லம் எனினும் இதுவரை எவரிடமிருந்தும் நீதிமன்றில் ஆஜராவது தொடர்பான அழைப்பாணைகள் வந்திருக்கவில்லையென தெரிவித்துள்ளது. அத்துடன் மதகுருமார் தலைமறைவாகியதாக வெளிவந்த செய்;தியினை அது முற்றாக நிராகரித்துள்ளது.
இதனிடையே கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் மதகுருமார்களை மக்களிடமிருந்து நிராகரிக்க வைப்பதன் மூலமாக அவர்களது குரல்களை சர்வதேச மட்டத்தில் பெறுமதியற்றதாக்குவதே பாதுகாப்பு அமைச்சின் பிரதான நோக்கமாக உள்ளதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to யாழ்ப்பாணத்தில் கோத்தாவின் விசேட அணி!