Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.சிறையில் தொடரும் மர்ம மரணங்கள்!

பதிந்தவர்: தம்பியன் 24 April 2014

யாழ்.சிறைச்சாலைச்சாலையினில் தொடரும் மர்ம மரணங்களால் அங்கு அச்சமானதொரு சூழல் காணப்படுகின்றது.இந்நிலையினில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தரை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்டிருந்த நிலையினில் அவர்; பொலிஸில் சரணடைந்துள்ளார்.

யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதால் மூச்சுத்திணரல் ஏற்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சாவடைந்தார். இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபரின் மூளை நரம்புப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டமையாலேயே உயிரிழந்ததாக பிரேத பிரிசோதனையினில் கண்டறியப்பட்டதாக  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னதாகவும் கைதியொருவர் சந்தேகத்திடமாக உயிரிழந்ததாகவும் எனினும் அவர் மூச்சுத்திணறியே உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to யாழ்.சிறையில் தொடரும் மர்ம மரணங்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com