Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நரேந்திர மோடி 3D தொழில் நுட்பத்தின் மூலம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் பேசி, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களை கண்டுப்பிடித்து அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கும்படியாக தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறையில்  அடைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவை குற்றவாளிகளிடமிருந்து மீட்டெடுப்போம் என்று மோடி சூளுரைத்துள்ளார். அரசியல் குற்றவாளிகள் வசமானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றப்பின்னணிக் கொண்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, பஞ்சாயத்து ராஜ் வரையிலான அதிகார மட்டத்திலிருக்கும் குற்றவாளிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுக்கும் தண்டனை வழங்குவதில் பாஜக முனைப்புடன் செயல்ப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.

0 Responses to குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு சிறைத்தண்டனை!: மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com