Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாயமான மலேசிய விமானத்தில் புதுமணத் தம்பதிகள் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

மலேசியாவை சேர்ந்த முகமது ரஸாஹன் ஜமானிக்கும், நோர்லி அக்மர் ஹமீது என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்ததையடுத்து இவர்கள் தங்கள் தேனிலவை கொண்டாட மலேசிய விமானம் எம்.ஹெச்.370 மூலம் சீனாவுக்கு கிளம்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய பெருங்கடலுக்குள் விழுந்ததாக கூறப்படும் எம்.ஹெச். 370 மலேசிய விமானத்தில் புதுமணத் தம்பதிகளும் மாயமானதால் முகமது ரஸாஹனின் உறவினர் ஷாரி வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷாரி கூறுகையில், தனது உறவினர் மேற்கொண்ட இந்த முதல் வெளிநாட்டு பயணமே இப்படி ஆகிவிட்டது.

இந்த பயணத்திற்காக முகமது ரஸாஹன் பணத்தை சேமித்து வந்தார் என்றும் நகைச்சுவையாய் பேசும் அவர் தற்போது இல்லாதது மிகவும் பேரிழப்பாய் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உறவினர் இறந்துவிட்டார் என்றால் அவரது உடலை தங்களிடம் கொடுக்க வேண்டும் என ஷாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to தேன்நிலவு தம்பதியரின் வாழ்வின் தொடக்கமே முடிவிற்கு வந்த பரிதாபம்! - மலேசிய விமானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com