Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நரேந்திர மோடி தனது 18 வயதில் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடியவர் என மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னௌவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் அமைச்சர் வேணி பிரசாத், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 18 வயதில் கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வேணி பிரசாத்தின் பேச்சிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இ்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரம் மிகக் கீழ்த்தரமாகப் போய்விட்டது. மோடி பற்றிய அவரின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடியாள் எனக் கூறியதற்காக வேணி பிரசாத் வர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மோடி ஒரு கொலைகாரர்: வேணி பிரசாத் வர்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com