Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம்.

ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் அம்மையார் ஜெயலலிதா. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு. இலங்கை ஒரு நாடு அல்ல. அங்கு தமிழர்களும், சிங்களர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தான் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அதற்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான். இந்த நிலைப்பாட்டை ஏற்கிறோம். அதனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறோம்.

ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தியவர் இந்த மாநில முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை!- சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com