கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முன்னெடுப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இரணைதீவுப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்காத நிலையில், அந்த மக்கள் இரணைமாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் இரணைமாதா நகரிலிருந்து நாளாந்தம் இரணைதீவு பகுதிக்கு தொழில் நடவடிக்கைக்கான சென்று வரும் நிலையில் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அவர்களை இரணைதீவு பகுதியில் மீளக் குடியேற்றுவதற்கும் அவர்களது சுதந்திரமான தொழில் நடவடிக்கைகளுக்கும் கடற்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைளைக் கருத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடம் கலந்துரையாடி அவர்களது சுதந்திரமான நடவடிக்கைக்கு உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

0 Responses to கிளிநொச்சி இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ் தேவானந்தா