Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தரப் பிரதேசத்தில் பதூன் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு படுகொலை செய்யப்பட்ட 13,15 வயது இரு பெண்களினதும் உறவினர்கள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கு அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி பின்னர் மரத்தில் இரு பெண்களும் தூக்கில் தொங்கவிடப்பட்ட பகுதியையும் சென்று பார்வையிட்டார். குறித்த பெண்களின் தந்தையாரை சந்தித்த பின்னர் ராகுல் காந்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'நஷ்ட ஈடு தனது நோக்கத்தை நிறைவேற்றாது. தனக்கு வழங்கப்படவேண்டிய நியாயமான தீர்ப்பு பணத்தால் ஈடு செய்ய முடியாதது' என அப்பெண்களின் தந்தை தன்னிடம் கூறியதாக கூறியதாக தெரிவித்தார்.

மேலும் உடனடியாக இவ்விவகாரம் சிபிஐயின் நேரடி விசாரணைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இருபெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் ஐந்தாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே ராகுல் காந்தியின் விஜயம் அமைந்துள்ளது. இவ்விவகாரத்தில் மேலும் இருவர் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த மே 27ம் திகதி குறித்த இரு தலித்துப் பெண்களும் குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் பூதவுடல் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கபப்ட்டிருந்தது.

இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரில் காவல்துறை அதிகாரி சர்வேஷ் யாதவ் அவரது சகோதரர்கள், மற்றும் காவல்துறை அதிகாரி சத்ரபால் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

இவ்விவகாரத்தை விசாரித்து உடன் தீர்ப்பு வழங்குமாறு உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அகிலேஷ் யாதவுடன் இது தொடர்பில் தொலைபேசியில் பேசியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 27ம் திகதி குறித்த இரு பெண்களும் (14,15 வயது) காணாமல் போயிருந்தனர். மறுநாள், அவர்களின் உடல்கள், உஷாயித் எனும் கிராமத்தில் மரத்தில் தொங்கியபடி இருந்து மீட்கபப்ட்டது.

குறித்த பெண்கள் காணாமல் போயிருப்பதாக உடன் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் காவல்துறையினரின் அலட்சியப் போக்கே இம்மரணங்களுக்கு காரணம் என கிராமத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

0 Responses to உத்தரபிரதேச பாலியல் வல்லுறவு : பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com